ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனயோ ஆண்கள் நட்சத்திரங்களாக வரலாம். ஆனால் அந்த இனிய வானில் காதலனாக, அவள் மனம் கவர்ந்த கள்வனாக ஒருவன்தான் வெண்ணிலாவாக வர இயலும்.
அப்படி இருக்கவேண்டும் என்றால் அவளின் பெண்மை நீரோடை போல சுத்தமாக தெளிந்து இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தும் கண்ணதாசனின் இனிய வரிகள். ஜென்சியின் இனிய குரலில் மனதை சுண்டி இழுக்கும் பாடல்.
பாடல் வரிகள்
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...
(என் வானிலே)
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா...
ஆஹ. ஹா.. ஆஆஆஆ
(என் வானிலே)
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஹ. ஹா.. ஆஆஆஆ
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...
No comments:
Post a Comment