Monday, June 23, 2008

பேசுகிறேன் - சத்தம் போடாதே

எதையும் சாதிக்க உள்ளம் நலத்துடன் இருக்க வேண்டும்.
உள்ளம் உடைந்து விட்டால் வெல்வது இருக்கட்டும் வீழாமல் இருப்பது கடினம்.
வாழ்க்கை இலேசானது அல்ல. மேடு பள்ளங்கள் நிறைந்தது. வெற்றியின் போது வீராப்பு கொள்ளாமலும், தோல்வியின் போது துவண்டு விடாமலும் இருப்பது மிகவும் அவசியம். அதானால்தான் இந்த பெண் புயல் அடித்தாலும் கலங்காமல் இருப்பதோடு பூக்களும் நீட்டுகிறாள்.

இந்த பாடல் துவண்ட உள்ளங்களை வருடுவதோடல்லாமல், தட்டி எழுப்புகிறது.




பாடல் வரிகள்:
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காது
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனத்தை தொலைக்காதே (ஏய்)
அடங்காமலே …
அலை பாய்வதேன்
மனம் அல்லவா.. ஆ

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தாள் கலங்காது நான் பூக்கள் நீட்டுகிறேன்

காதல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே
கண்டம் தாண்டுமே
ஓ ஓ ஓ ஓ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவேன்பதும் ஆரம்பமே

வளைவில்லாம் மாலை
மாலை கிடையாது
வழி இல்லாமல்
மனம் கிடையாது
வருந்தாதே வா….

அடங்காமலே … அலை பாய்வதேன் மனம் அல்லவா.. ஆ

காதில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே
தானாய் வளருமே

ஓ ஓ ஓ ஓ

பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணை கொஞ்ச நேரம் தானே
உன்னை கொஞ்சினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல் தான்
ஒரு இரவேது
வடியாமல் தான்
வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா….

அடங்காமலே … அலை பாய்வதேன் மனம் அல்லவா.. ஆ

No comments: