Monday, April 21, 2008

Munbe Vaa - Sillendru Oru Kadhal

When this guy look at his lover, he wonder how come the crescent lives in her eyes. So he asks நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா.

However she is burning with the power of love(மன பூ வைத்து பூ வைத்த பூவைக்குள் தீ வைத்தாய் )

Another Fantastic tune by AR Rahman.
Beautifully sung by Shreya Goshal.



Lyrics:
Song: Munbe Vaa
Lyrics: Kavignar Vaali
Music: Isai Puyal A.R.Rahman
Singers:Shreya Ghoshal,Naresh Iyer
Movie:Sillunu Oru Kadhal

பெண்: முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

கோரஸ்: ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

பெண்: பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மன பூ வைத்து பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஓ...

ஆண்: நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் ஆழத்தில் உன் ரத்தம்
ஆடைக்குள் உன் சத்தம் உயிரே ஒகோஓ

பெண்: வாழும் ஒரு சில நாளும்
கனி என ஆனால் தருவேன் என்னை
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

ஆண்: நான் நானா கேட்டேன் என்னை நானே

பெண்: முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

ஆண்: நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள் வேராரும் வந்தாலே
தகுமாஆஆ

பெண்: தேன்மலை தேக்குக்கு நீதான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல் வேராரும் சாய்ந்தாலே
தகுமா...

ஆண்: நீரும் செங்குள சேறும்
கலந்தது போலே கலந்தவலா

பெண்: முன்பே வா என் அன்பே வா ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

ஆண்: நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்புதான்

பெண்: முன்பே வா என் அன்பே வா ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

கோரஸ்: ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்
ஜல் ஜல்

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

No comments: