Monday, April 14, 2008

Sudum Nilavu - Thambi

How is the feeling if you are under moon light. Very nice and pleasant feeling. right?

How about standing in the sun light. You feel very hot and you wanted to move towards shadow. right?

But when you are in love, and talking to your lover in the hot sun, you don't really feel the heat and it will be pleasant. Howver if your lover is not with you, even the moonlight will be hotter.

Listen the song with beautiful lyrics from Vairamuthu.



Lyrics:

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை
என்று தெரிந்து போகும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

No comments: