காதல் எப்படி வருகிறது?
யோசித்தாலும் சொல்வது கடினம்.
தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும்
எவரையும் புரட்டி போட்டு விட காதலுக்கு முடியும்.
காதலில் விழ மாட்டேன் என வீராப்பில் இருந்தவர்களை எல்லாம்
பல காலம் காதலிக்காக தவம் கடந்த கதைகள் ஏராளம்..
Thursday, May 29, 2008
காதலுக்கு கண்கள் - சந்தோஷ் சுப்ரமணியம்
Tuesday, May 20, 2008
செந்தூரப்பூவே - 16 வயதினிலே
பருவ வயதில் ஏற்படும் மாற்றங்கள் அலாதியானவை
சில சொல்ல கூடியவை
சில ரசிப்பதற்கு மட்டுமே உரித்தானவை.
ஏக்கங்கள். எதிர்பார்ப்புகள்.. என
அதில் பல உணர்ச்சிகள் அடங்கும்.
இதற்கு ஆண் பெண் என விதி விலக்கில்லை
அதில் மிக முக்கியமானது வாழ்க்கை துணையை பற்றியது
இங்கே ஒரு இளம் பெண் தன் துணைவனை தேடுகிறாள்.
ரசித்து மகிழுங்கள்..
Saturday, May 17, 2008
ராமனா பொறந்தாலும் - சாது மிரண்டால்
காசு தான் கடவுளடா
அது கடவுளுக்கே தெரியும்டா
உலகத்தில் வாழ காசு அவசியம்.
ஆனால் அதுவே போதுமானதா என்றால் அது சந்தேகம் தான்.
அப்புறம் எதற்கு இந்த பாடலை தேர்வு செஞ்சே என்றுதானே கேட்கிறீர்கள்
என்னை விட, என்னை கவர்ந்தவரை கவர்ந்த பாடல்.
Friday, May 16, 2008
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று.. - கேப்டன் மகள்
காதல் வந்தால் எதுவும் இனிமையாத தோன்றும்.
அப்படியிருக்க காதலி ..
சொல்லவா வேண்டும்.
அவளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பிற்கு காரணம் என்ன?
கேட்டால் சொல்வார்கள் எதோ ஒன்று, சொன்னால் புரியாது என்பார்கள்.
உண்மையில் அவர்களுக்கும் காரணம் தெரியாது.
அதுதான் காதலின் மகிமை..
Monday, May 12, 2008
துளி துளியாய் - பார்வை ஒன்று போதுமே
மழையில் நனையும் சுகம் எவ்வளவு இனிமையானது..
வார்த்தையில் வர்ணிக்க இயலாதது.
ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதலும் அப்படித்தான்.
ஒரு சின்ன பார்வை ஒன்று போதும்.
உனக்குள் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்த.
Friday, May 9, 2008
அக்கம் பக்கம் - கிரீடம்
காதல் - ஒரு இனிமையான அனுபவம்.
அதை நன்கு கொண்டாட தனிமை மிகவும் அவசியம்.
ஆனால் அது கிடைக்காமல் போனால் -
அப்புறம் இப்படி தான் பாட நேரிடும்.