Wednesday, August 27, 2008

கண்களிரண்டால் - சுப்ரமணியபுரம்

காதல் என்பது பலருக்கு பலவிதமாக வரும். ஆனால் அதற்க்கு மூல பொருளாக இருப்பது கண்கள் தான். அதை யாராலும் மறுக்க இயலாது. அப்படி காதலின் கண்களால் கட்டி இழுக்கப்பட்ட காதலனின் பாடல்.

புது பாடல்களெல்லாம் குத்து பாடலை நோக்கி செல்லும் இந்த நேரத்தில் மனதை தென்றலாய் வருடும் ஒரு அருமையான பாடல்.



பாடல் வரிகள்

கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்
போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்களிரண்டால்)

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

(கண்களிரண்டால்)

பிறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்
போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

ராதை மனதில் - சிநேகிதியே

சில பாடல்களுக்கு முகவரி தேவையில்லை. கேட்டவுடன் காரணம் தெரியாமல் மனதை கொள்ளையடித்து விடும். அது போன்ற பாடலில் இதுவும் ஒன்று. காரணம் வித்யாசாகரின் துடிப்பான இசையா? இனிமையான சித்ராவின் குரலா?அற்புதமான நடனங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் காட்சியா? நீங்களே பார்த்து சொல்லுங்கள்.




பாடல் வரிகள்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (2)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காதில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒதுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

(ராதை மனதில்...)

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
காதை இறந்து விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைத்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்தது விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க

(ராதை மனதில்...)

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியதும் கண்ணன் இல்லை வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காதில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியாய் எங்கு கண்டு பிடிப்பாள்
விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கை நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க

(ராதை மனதில்...)

Monday, August 25, 2008

என் வானிலே - ஜானி

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனயோ ஆண்கள் நட்சத்திரங்களாக வரலாம். ஆனால் அந்த இனிய வானில் காதலனாக, அவள் மனம் கவர்ந்த கள்வனாக ஒருவன்தான் வெண்ணிலாவாக வர இயலும்.

அப்படி இருக்கவேண்டும் என்றால் அவளின் பெண்மை நீரோடை போல சுத்தமாக தெளிந்து இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தும் கண்ணதாசனின் இனிய வரிகள். ஜென்சியின் இனிய குரலில் மனதை சுண்டி இழுக்கும் பாடல்.


பாடல் வரிகள்

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா...
ஆஹ. ஹா.. ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஹ. ஹா.. ஆஆஆஆ


என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...

Thursday, August 21, 2008

உப்பு கல்லு - கருப்பசாமி குத்தகைதாரர்

காதல் எப்பொழுது வரும், யாருடன் வரும் என்று யாருக்கும் தெரியாது. காதல் கவுரவம் பார்க்காதது. காலம் தாண்டி, தேசம் தாண்டி எங்கும் பரவக்கூடியது. அதனால்தான் இப்பொழுதெல்லாம் ஈ மெயில் காதல், இன்டர்நெட் காதல் என வளர்ந்துள்ளது. அதற்க்கு எந்த வரைமுறையும் கிடையாது.

ஆனால் ஒரு உப்பு கல்லு தண்ணீரை தேடினால் என்ன ஆகும்?

பாம்பே ஜெயஸ்ரீயின் இனிய குரலில் ஒரு உணர்ச்சிகரமான பாடல்.



பாடல் வரிகள்
ஓ......
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நெஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே!

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய்
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
ஓ...

மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நெஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே!

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது

Wednesday, August 13, 2008

ஒ சென்யோரிடா - பூவெல்லாம் கேட்டுப்பார்

காதல் வந்தால் காதலி ஒரு சாதாரண பிகர் ஆக இருந்தால் கூட ஒரு தேவதை போல தெரிவாள். ஆனால் அவள் ஒரு அழகியாக இருந்து விட்டால் சொல்லத்தான் வார்த்தை கிடைக்குமா?

அதனால் தான் அவளது மூச்சு காற்று கூட சிறந்த இசையாக உள்ளது சாதாரணமாக அசையும் அவளது கூந்தல் கூட அருமையான நடனமாக தெரிகிறதாம்.

ராஜு சுந்தரத்தின் அழகிய நடனத்தில் ஒரு இனிய பாடல்.

Thursday, August 7, 2008

தென்மேற்கு பருவ காற்று - கருத்தம்மா

கன்னி அவள் மேல் காதல் கொண்டால் இந்த பூமியே சொர்க்கமாகும்..
அப்பொழுது காணும் காட்ச்சிகலேல்லாம் அவளாக உரு மாற்றம் பெரும். அதனால் தான் இந்த காதலனுக்கு வானத்திலோ புமியிலோ இல்லாத வண்ணங்கலேல்லாம் காதலியிடம் பார்த்து விடுகிறான்.
ஏ ஆர் ரஹ்மானின் இனிய இசையில் ஒரு இனிய பாடல்


பாடல் வரிகள்

தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்
இன்ப சாரல்
தென்மாங்கு பாடி கொண்டு சிலு சிலுவென்று
சிந்துததம்மா தூறல்.. முத்து தூறல்..
வெண்காட்டு பக்கக் கள்ளி சட்டென்று மொட்டு விட
செங்காட்டு சில்லி செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்.. இன்ப சாரல் ..

வானோடும் மண்ணோடும் நில்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழை துளி என்ன தவம் தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டடாதுதே
மழை துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினக்கயில் உள்ளூர கல்லூறுதே

தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்
இன்ப சாரல்
தென்மாங்கு பாடி கொண்டு சீலு சீலு வென்று
சிந்துததம்மா தூறல் முத்து தூறல்

நீயென்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்றே ஓர் வார்த்தை உண்டானதே
ஆண் என்றும் பெண் என்றும் ஒரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்றே ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்றே மந்திரத்தின் மாயம் என்னே
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண் ஆனதே

தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்
இன்ப சாரல்
தென்மாங்கு பாடி கொண்டு சீலு சீலு வென்று
சிந்துததம்மா தூறல்.. முத்து தூறல்..

வெண்காட்டு பக்கக் கள்ளி சட்டென்று மொட்டு விட
செங்காட்டு சில்லி செடி சில்லென்று பூவெடுக்க