Friday, October 24, 2008

மேகம் கருக்குது - குஷி

மழை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை.
மழை பெய்யும் அழகை நாள் பூராவும் பார்த்தாலும் திகட்டாது. அப்படி அதை ரசிப்பது எனது ஒரு இனிய பொழுது போக்கு.
ரசிப்பதே சுகம் என்றால் அதில் நனைவது.. அட அட..

பள்ளி பருவத்தில் மழையில் நனைந்து வரும் என்னை காணும் என் தாய் ..
"என்ன பையன் இவன். மழை பெய்தால் எங்காவது ஒதுங்க தெரியாது. அப்படி அவசரம் என்றால் வேகமாக ஓடியாவது வரலாமே. ஏன் இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து வருகிறான்" என்று வருத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு அப்பொழுது தெரியாது நான் வேணும் என்றுதான் அப்படி நனைந்து வந்தேன் என்று. கால போக்கில் அதை உணர்ந்து, மழையில் நனையும் பொழுதெல்லாம் "டேய் சீக்கிரம் வாடா. ஜுரம் வந்து தொலைக்க போவுது" என்று சொல்வார்கள்.

அப்படி மழையில் நனையும் பொழுது தோன்றும் இனிய கற்பனைகள்தான் இந்த பாடல். ஹரிணியின் இனிய குரலில் ஜோதிகா அனுபவித்து ஆடும் பாடல் இதோ உங்களுக்காக..

ஆமாம் இப்படி மழையில் நனைபவரா நீங்கள்.. அப்படி என்றால், உங்கள் எண்ணத்தை இங்கு பதிவு செய்யுங்கள்.

பாடல் வரிகள்

மேகம் கருக்குது
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்,
வானவில் கொடியில், என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது
மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே

நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோட குளிப்பது சுகம் அல்லவா?
உன் கரையை சலவை செய்து விட வா

புறாவே வா வா வா,
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இதம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா?

காற்றைபோலே எனக்கு கூட,
சிறகொன்றும் கிடையாது
தரை மேல செல்லும் போது
சிறை செய்ய முடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருப்பது ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்..

கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பறப்பு
என் அழகை பறந்து பறந்து பறப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால்தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்து கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன், ஹோய்...

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது
மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே
மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

Friday, October 10, 2008

பொன் வானம் - இன்று நீ நாளை நான்

தனிமை கொடுமையானது. அதிலும் இளமையில் தனிமை மிகவும் கொடுமையானது. எல்லாம் இருந்தும் சூழ்நிலையின் கைதியாக விதவையாக வாழும் பெண்ணின் என்ன ஓட்டங்கள் தான் இந்த பாடல்.

அருமையான மழையின் பின்னணி இசையோடு , ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழாகாக தன் குரலில் கொண்டு வந்து ஜானகி பாடும் இனிய கீதம். "தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ" என்று கேட்கும்பொழுதே அந்த சோகம் நம்மில் தொற்றிக்கொல்லுகிறது.


பாடல் வரிகள்

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...

மேகம் கருக்குது - ஆனந்த ராகம்

சூழ்நிலைக்கேற்ற பாடு () எப்பொழுதுமே கேட்க்க மிக இனிமையாக இருக்கும். அதுவும் நாட்டுப்புற பாடல்கள் மண்ணின் மணம் மாறாமல் இருக்கக்கூடியவை. அப்படி பட்ட பாடல்களில் குறிப்பிடத்தக்க பாட்டு இது.
பார்த்து மகிழுங்கள்.

மறக்காமல் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.


பாடல் வரிகள்:

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து

தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன
தென்றல் தொட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆச வந்து...
ஏதோ நெஞ்சில் ஆச வந்து
என்னென்னவோ ஆகிப்போச்சு
சேராம தீராது
வாடக் குளிரில் வாடுது மனசு

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து

பூவுக்குள்ள வாசம் வெச்சான்
பாலுக்குள்ள நெய்ய வெச்சான்
கண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பொங்குதடி எம்மனசு
பார்த்த கண்ணு சொக்கிச் சொக்கி
பைத்தியந்தான் ஆகிப்போச்சு
நீராடி நீ வாடி
ஆச மயக்கம் போடுற வயசு

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழக்காத்து

Thursday, October 2, 2008

ஜனவரி நிலவே - என்னுயிர் நீதானே

காதலுக்கு பொய் அழகு என்பர் சிலர்.
பொய் இல்லாமல் காதலே இல்லை என்பர் மற்றும் சிலர்..

ஆனால் பொய் சொன்னாலும் அது காதலியை மகிழ்ச்சி அடைய செய்யுமே ஆனால் அது தவறு இல்லை என்பது என் கருத்து. ஆதலால் தான் பெண்ணை, மான் என்றும் மீன் என்றும் வர்ணிக்கின்றனர். காதலிக்கும் பெண்ணிற்கும் அது பொய் என்று தெரியும். அப்படி இருந்தும் அதை ரசிக்கின்றனர்.

எது எப்படியோ பொய்யும் காதலின் ஒரு பங்கு என்பதை யாரும் மறுக்க இயலாது.

அப்படி தான் இந்த காதலனும் காதலியை புகழ்கிறார். அந்த காதலியோ அதை ரசித்தாலும்.. (நான் சொல்வதை விட நீங்களே கேட்டு மகிழுங்களேன்)






பாடல் வரிகள்

திரைப்படம் - என்னுயிர்  நீதானே 
பாடகர்கள் - கிருஷ்ண   ராஜ், சுஜாதா 
இசை - தேவா 

ஜனவரி  நிலவே  நலம்தானா
ஜனகனின்  மகளே  சுகம்தானா 
உன்னிடத்தில்  என்னை  அள்ளி  கொடுத்தேன் 
உன்  பெயரை  என்  மனதில்  விதைத்தேன் 
என்  உயிரை  உன்  நிழலில்  தொலைத்தேன் 
என்னமோ  பேச  எண்ணி  தவித்தேன் 

பொய்  சொல்லாதே  பொய்  சொல்லாதே 
ஓஓ 
பொய்  சொல்லாதே 

(ஜனவரி  நிலவே) 

உன்னை  விட 
ரதியும்  அழகில்லை 
பொய்  சொல்லாதே 
உன்னை  விட 
நதியும்  அழகில்லை 
பொய்  சொல்லாதே 
உன்னை  விட 
மலரும்  அழகில்லை 
பொய்  சொல்லாதே 
ஓஓ  உன்னை  விட 
மயிலும்  அழகில்லை 
பொய்  சொல்லாதே 
ரதியும் அழகில்லை, நதியும்  அழகில்லை 
மலரும்  அழகில்லை, மயிலும்  அழகில்லை 
பொய்  சொல்லாதே 

விண்ணும்  அழகில்லை, மண்ணும்  அழகில்லை 
மானும் அழகில்லை, நானும்  அழகில்லை 
பொய்  சொல்லாதே 

சன்னல் ஓரம் 
மின்னல் வந்து  சிரிக்கும் 
கண்ணுக்குள்ளே  காதல்  மழை 
அடிக்கும் 
மூச்சு நின்று  போன  பின்பும் எனக்கும் 
நெஞ்சில்  உந்தன்  ஞாபகமே 
இருக்கும் 
பொய்  சொல்லாதே 
பொய்  சொல்லாதே 
ஒ  பொய்  சொல்லாதே 

(ஜனவரி நிலவே)

நேற்று  வரை  நெஞ்சில் 
யாருமில்லை 
பொய்  சொல்லாதே 
இன்று  முதல்  இதயம் 
துடிக்கவில்லை 
பொய்  சொல்லாதே 
உன்னை  காணும்  வரை  காதல் 
தெரியவில்லை 
பொய்  சொல்லாதே 
கண்ட  பின்பு  கண்ணில் 
தூக்கமில்லை 
பொய்  சொல்லாதே 
நிலவு  நீ  இன்றி 
இரவும்  எனக்கில்லை 
பாவை  நீ  இன்றி 
பகலும்  எனக்கில்லை 
பொய்  சொல்லாதே 

இன்னும்  ஒரு  கோடி 
ஜென்மம்  வரும்  போதும் 
வஞ்சி  நீ  இன்றி 
வாழ்க்கை  எனக்கில்லை 
பொய்  சொல்லாதே 

உன்  பாதம்  பட்ட 
பூமி  எங்கும்  ஜொலிக்கும் 
நீ  சூடி  கொண்ட 
காகிதப்பூ  மணக்கும் 
உன்  புன்னகையில் 
என்  மனது  திறக்கும் 
உன்  கண்ணசைவில் 
காதல்  கோடி  பறக்கும் 
பொய்  சொல்லாதே 
பொய்  சொல்லாதே 
ஓ பொய்  சொல்லாதே 

(ஜனவரி  நிலவே)