Friday, October 24, 2008

மேகம் கருக்குது - குஷி

மழை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை.
மழை பெய்யும் அழகை நாள் பூராவும் பார்த்தாலும் திகட்டாது. அப்படி அதை ரசிப்பது எனது ஒரு இனிய பொழுது போக்கு.
ரசிப்பதே சுகம் என்றால் அதில் நனைவது.. அட அட..

பள்ளி பருவத்தில் மழையில் நனைந்து வரும் என்னை காணும் என் தாய் ..
"என்ன பையன் இவன். மழை பெய்தால் எங்காவது ஒதுங்க தெரியாது. அப்படி அவசரம் என்றால் வேகமாக ஓடியாவது வரலாமே. ஏன் இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து வருகிறான்" என்று வருத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு அப்பொழுது தெரியாது நான் வேணும் என்றுதான் அப்படி நனைந்து வந்தேன் என்று. கால போக்கில் அதை உணர்ந்து, மழையில் நனையும் பொழுதெல்லாம் "டேய் சீக்கிரம் வாடா. ஜுரம் வந்து தொலைக்க போவுது" என்று சொல்வார்கள்.

அப்படி மழையில் நனையும் பொழுது தோன்றும் இனிய கற்பனைகள்தான் இந்த பாடல். ஹரிணியின் இனிய குரலில் ஜோதிகா அனுபவித்து ஆடும் பாடல் இதோ உங்களுக்காக..

ஆமாம் இப்படி மழையில் நனைபவரா நீங்கள்.. அப்படி என்றால், உங்கள் எண்ணத்தை இங்கு பதிவு செய்யுங்கள்.

பாடல் வரிகள்

மேகம் கருக்குது
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்,
வானவில் கொடியில், என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது
மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே

நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோட குளிப்பது சுகம் அல்லவா?
உன் கரையை சலவை செய்து விட வா

புறாவே வா வா வா,
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இதம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா?

காற்றைபோலே எனக்கு கூட,
சிறகொன்றும் கிடையாது
தரை மேல செல்லும் போது
சிறை செய்ய முடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருப்பது ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்..

கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பறப்பு
என் அழகை பறந்து பறந்து பறப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால்தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்து கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன், ஹோய்...

மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது
மேகம் கருக்குது,மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள்,
நதியாய் போகிறதே
மேகம் கருக்குது,
மின்னல் சிரிக்குது,
சாரல் அடிக்குது,
இதயம் பறக்குது

No comments: