காதலுக்கு பொய் அழகு என்பர் சிலர்.
பொய் இல்லாமல் காதலே இல்லை என்பர் மற்றும் சிலர்..
ஆனால் பொய் சொன்னாலும் அது காதலியை மகிழ்ச்சி அடைய செய்யுமே ஆனால் அது தவறு இல்லை என்பது என் கருத்து. ஆதலால் தான் பெண்ணை, மான் என்றும் மீன் என்றும் வர்ணிக்கின்றனர். காதலிக்கும் பெண்ணிற்கும் அது பொய் என்று தெரியும். அப்படி இருந்தும் அதை ரசிக்கின்றனர்.
எது எப்படியோ பொய்யும் காதலின் ஒரு பங்கு என்பதை யாரும் மறுக்க இயலாது.
அப்படி தான் இந்த காதலனும் காதலியை புகழ்கிறார். அந்த காதலியோ அதை ரசித்தாலும்.. (நான் சொல்வதை விட நீங்களே கேட்டு மகிழுங்களேன்)
பாடல் வரிகள்
திரைப்படம் - என்னுயிர் நீதானே
பாடகர்கள் - கிருஷ்ண ராஜ், சுஜாதா
இசை - தேவா
ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னமோ பேச எண்ணி தவித்தேன்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓஓ
பொய் சொல்லாதே
(ஜனவரி நிலவே)
உன்னை விட
ரதியும் அழகில்லை
பொய் சொல்லாதே
உன்னை விட
நதியும் அழகில்லை
பொய் சொல்லாதே
உன்னை விட
மலரும் அழகில்லை
பொய் சொல்லாதே
ஓஓ உன்னை விட
மயிலும் அழகில்லை
பொய் சொல்லாதே
ரதியும் அழகில்லை, நதியும் அழகில்லை
மலரும் அழகில்லை, மயிலும் அழகில்லை
பொய் சொல்லாதே
விண்ணும் அழகில்லை, மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை, நானும் அழகில்லை
பொய் சொல்லாதே
சன்னல் ஓரம்
மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை
அடிக்கும்
மூச்சு நின்று போன பின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே
இருக்கும்
பொய் சொல்லாதே
பொய் சொல்லாதே
ஒ பொய் சொல்லாதே
(ஜனவரி நிலவே)
நேற்று வரை நெஞ்சில்
யாருமில்லை
பொய் சொல்லாதே
இன்று முதல் இதயம்
துடிக்கவில்லை
பொய் சொல்லாதே
உன்னை காணும் வரை காதல்
தெரியவில்லை
பொய் சொல்லாதே
கண்ட பின்பு கண்ணில்
தூக்கமில்லை
பொய் சொல்லாதே
நிலவு நீ இன்றி
இரவும் எனக்கில்லை
பாவை நீ இன்றி
பகலும் எனக்கில்லை
பொய் சொல்லாதே
இன்னும் ஒரு கோடி
ஜென்மம் வரும் போதும்
வஞ்சி நீ இன்றி
வாழ்க்கை எனக்கில்லை
பொய் சொல்லாதே
உன் பாதம் பட்ட
பூமி எங்கும் ஜொலிக்கும்
நீ சூடி கொண்ட
காகிதப்பூ மணக்கும்
உன் புன்னகையில்
என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில்
காதல் கோடி பறக்கும்
பொய் சொல்லாதே
பொய் சொல்லாதே
ஓ பொய் சொல்லாதே
(ஜனவரி நிலவே)
Thursday, October 2, 2008
ஜனவரி நிலவே - என்னுயிர் நீதானே
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
நினைவலைகளின் வெளிப்பாடு தான் எண்ணம்.
ஆகவே,
எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி..!
இதுபோல் நிறைய தங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அன்பன்.
சரியாக சொன்னீர். உங்கள் எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரிபாய்.
Post a Comment