சில பாடல் கேட்க்கும் போதே மனசில் பச்சக் என ஒட்டி கொண்டு விடும்.
சில பாடல் கேட்டால் சாதாரணமாக இருக்கும்.
படம் பார்த்தவுடன் அது நம்மை கவர்ந்து விடும்.
பாடல் கவர்வதற்கு பல காரணங்கள்.
சில சமயம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இசை.
மனதை வருடும் வரிகள்.
ரம்மியமான குரல்.
இப்படி பல.
இந்த பாடலும் அப்படி தான்.
அருமையான இசை.
மனதை கொள்ளை கொள்ளும் முஹம்மது அஸ்லாமின் குரல்.
நளினமான நடனம்.
இதோ கேட்டு மகிழுங்கள்.
பாடல் வரிகள்
F: கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
M: குஷியாகும் Body அட இது போல் வருமாடி
M: ஒய்யாரி
F: ஏ அசந்து புடி
M: சிங்காரி
F: நீ அழுத்தி புடி
M: கொடியேத்தி
F: தூக்கி புடி இனி ரூட்ட கொஞ்சம் மாத்து
humming
F: கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
M: குஷியாகும் Body அட இது போல் வருமாடி
F: குத்தாலத்து ஊத காத்து கூத்தாடுது நேரம் பார்த்து
இப்போ சுதி ஏறுது தன்னாலே
M: அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னாலே
ஏதோ தோணுது எதுவோ நோகுது உன்ன பார்த்ததாலே
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததாலே
F: விடாத இந்த மோகம் வேகம்
தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்-ன்னு அடிக்கிற மனசு
வவ்வாலை போல பாயும்
வராதது வந்தாச்சுடா கொண்டாலாம் இனி நம்ம நேரம் தானே
humming...
F: துட்டாலே நீ கட்டி போடு
தூங்காம தான் கானா பாடு
விட்டால் இது வித வித விளையாட்டு
எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏன்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா
M: காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழ
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு
F: பொண்ணால மாலை எப்போதும் போல
நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கொண்டாடவேண்டும்
விடாத கொஞ்சம் gap-pu
எல்லாருக்கும் நல்லாருக்கும் fullarukkum இனி நம்ம நேரம்-தானே
F: கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
M: குஷியாகும் Body அட இது போல் வருமாடி
M: ஒய்யாரி
F: ஏ அசந்து புடி
M: சிங்காரி
F: நீ அழுத்தி புடி
M: கொடியேத்தி
F: தூக்கி புடி இனி ரூட்ட கொஞ்சம் மாத்து
Showing posts with label கவி. Show all posts
Showing posts with label கவி. Show all posts
Monday, February 2, 2009
கோடான கோடி - சரோஜா
Labels:
கவி,
சரோஜா,
முஹம்மது அஸ்லம்,
யுவன் சங்கர் ராஜா,
ரைனா
Subscribe to:
Posts (Atom)
