அருமையான பாடல்.
விடியல் காலையில் எடுத்தது போல் லைட்டிங்..
தபுவின் அழகை அப்பற்றமாக பறை சாற்றும் இனிய காட்சிகள்...
மனதை கவரும் எஸ் பி பாலா மற்றும் சித்ராவின் குரல்....
தெளிந்த நீரோடை போன்ற இளையராஜாவின் இசை.....
வேறு என்ன வேண்டும் ஒரு பாடலை ரசிப்பதற்கு?
Wednesday, July 23, 2008
செம்பூவே - சிறைச்சாலை
என்னை காணவில்லையே - காதல் தேசம்
காதலில் தன்னை தொலைத்தவர்கள் பலர். ஆனால் இங்கு இவருக்கு தன் காதலியை கண்டதால் தன்னுடைய உயிரே இவருக்கு தொலைந்து போனதாம்.
தன்னுடையை பரிதாபகரமான நிலையை கூறுகிறார் கேழுங்கள். காதலியின் பெயரை சொல்லியே இவர் உணவு கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன் என்று சொல்கிறார்.மேலும் தன்னை விரும்பாவிட்டாலும், பொய்யாவது சொல் என்று கேட்கிறார். ஏனென்றால் அது இல்லை என்றால் இவர் உயிர் இவரை விட்டு பிரிந்து விடுமாம்.
மனதை கவ்வும் பாடல்
Monday, July 21, 2008
மழை வருது - ராஜா கையை வச்சா
மழை வந்தால் அதிலிருந்து பாதுகாக்க சரியான குடை தேவை என்பது தானே சரி.
ஆனால் இங்கு இவருக்கு காதலியின் மெல்லிய மாராப்பு போதுமாம்..
காதலிக்கோ வெயிலிலிருந்து பாதுகாவல் தேட காதலனின் பேரன்பால் ஆனா நிழல் வேண்டுமாம்.
காதலில் ஏதோ பிதற்றுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்..
"காதலில் பிதற்றலும் ஒரு அழகிய கவிதை தான்"
Friday, July 11, 2008
மலரே மௌளனமா - கர்ணா
"நீ பாதி. நான் பாதி.. " என்பர் காதல் கொண்டோர். ஆனால் இங்கு பாதி உயிரில் வாழ்ந்ததாகவும் மீதி உயிர் காதலனை கண்ட பிறகே இங்கு இவருக்கு வந்ததாகவும் இவர் கூறுகிறார். இதுதான் காதலின் உச்சமோ?
மெலடி பாடல்களின் எண்ணிக்கை குறைந்த காலத்தில் வந்த அருமையான பாடல். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.