மழை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை.
மழை பெய்யும் அழகை நாள் பூராவும் பார்த்தாலும் திகட்டாது. அப்படி அதை ரசிப்பது எனது ஒரு இனிய பொழுது போக்கு.
ரசிப்பதே சுகம் என்றால் அதில் நனைவது.. அட அட..
பள்ளி பருவத்தில் மழையில் நனைந்து வரும் என்னை காணும் என் தாய் ..
"என்ன பையன் இவன். மழை பெய்தால் எங்காவது ஒதுங்க தெரியாது. அப்படி அவசரம் என்றால் வேகமாக ஓடியாவது வரலாமே. ஏன் இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து வருகிறான்" என்று வருத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு அப்பொழுது தெரியாது நான் வேணும் என்றுதான் அப்படி நனைந்து வந்தேன் என்று. கால போக்கில் அதை உணர்ந்து, மழையில் நனையும் பொழுதெல்லாம் "டேய் சீக்கிரம் வாடா. ஜுரம் வந்து தொலைக்க போவுது" என்று சொல்வார்கள்.
அப்படி மழையில் நனையும் பொழுது தோன்றும் இனிய கற்பனைகள்தான் இந்த பாடல். ஹரிணியின் இனிய குரலில் ஜோதிகா அனுபவித்து ஆடும் பாடல் இதோ உங்களுக்காக..
ஆமாம் இப்படி மழையில் நனைபவரா நீங்கள்.. அப்படி என்றால், உங்கள் எண்ணத்தை இங்கு பதிவு செய்யுங்கள்.