சில பாடல் கேட்டவுடன் மனதை கரைத்துவிடும்.
அப்படி ஒரு பாடல் தான் இது. கேட்டுப்பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.
பாடல் வரிகள்:
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
ஏய் ஹாய் எ
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
சரணம் 1
காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
ஹ்ம்ம் ..ஹீ
சரணம் 2
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
Monday, April 12, 2010
என் காதல் சொல்ல நேரம் இல்லை - பையா
Tuesday, February 17, 2009
உன் நெஞ்சை தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
சில பாடல் நமக்கு அவ்வளவாக பிடிக்காது.
ஆனால் திடீரென்று கேட்க்கும்பொழுது சில காரணங்களால், நமக்கு மிகவும் பிடித்து விடும். இந்த பாடலும் அப்படிதான்..
நீங்க என்னா நெனைக்கிறீங்க?
சில காரணங்களால் படத்தில் இடம் பெறாமல் போன ஒரு நல்ல பாடல்.
பாடல் வரிகள்
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
தண்ணி குள்ளே முக்குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலில சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குதம்மா
சாமியும் தான் இருக்கு இங்கே
வேடிக்கை தான் நடக்குதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ?
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
தாகதிலே சிப்பி ஒண்ணு
தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கிணையா?
எனக்கு அது வழிதுணையா?
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா?
என் மேல் ஆசை இல்லையா?
Monday, February 2, 2009
கோடான கோடி - சரோஜா
சில பாடல் கேட்க்கும் போதே மனசில் பச்சக் என ஒட்டி கொண்டு விடும்.
சில பாடல் கேட்டால் சாதாரணமாக இருக்கும்.
படம் பார்த்தவுடன் அது நம்மை கவர்ந்து விடும்.
பாடல் கவர்வதற்கு பல காரணங்கள்.
சில சமயம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இசை.
மனதை வருடும் வரிகள்.
ரம்மியமான குரல்.
இப்படி பல.
இந்த பாடலும் அப்படி தான்.
அருமையான இசை.
மனதை கொள்ளை கொள்ளும் முஹம்மது அஸ்லாமின் குரல்.
நளினமான நடனம்.
இதோ கேட்டு மகிழுங்கள்.
Wednesday, January 14, 2009
இப்பவே இப்பவே - ராமன் தேடிய சீதை
ஒருவர் மேல் கொள்ளும் அளவு கடந்த பிரியம் தான் காதலாக மலரும். அந்த பிரியமானவருடன் செலவிடும் ஒவ்வொரு கணங்களும் தென்றல் வருடுவது போல் சுகமானவை.
அப்படி மனம் கவர்ந்தவர் சிறிது நேரம் பிரிந்தாலும் அந்த நேரங்கள் கொடுமையானவை. அவரை இந்த கணமே பார்த்து விட மாட்டோமா என மனது ஏங்கும். அந்த வலியை அருமையாக எடுத்து இயம்பும் பாடல் இதோ உங்களுக்காக.
Tuesday, November 18, 2008
பூ வாடை காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை
அருமையான பாடல்.
இனிய வரிகள்.
ரசித்து மகிழுங்கள்.
Friday, October 24, 2008
மேகம் கருக்குது - குஷி
மழை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை.
மழை பெய்யும் அழகை நாள் பூராவும் பார்த்தாலும் திகட்டாது. அப்படி அதை ரசிப்பது எனது ஒரு இனிய பொழுது போக்கு.
ரசிப்பதே சுகம் என்றால் அதில் நனைவது.. அட அட..
பள்ளி பருவத்தில் மழையில் நனைந்து வரும் என்னை காணும் என் தாய் ..
"என்ன பையன் இவன். மழை பெய்தால் எங்காவது ஒதுங்க தெரியாது. அப்படி அவசரம் என்றால் வேகமாக ஓடியாவது வரலாமே. ஏன் இப்படி தொப்பல் தொப்பலாக நனைந்து வருகிறான்" என்று வருத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு அப்பொழுது தெரியாது நான் வேணும் என்றுதான் அப்படி நனைந்து வந்தேன் என்று. கால போக்கில் அதை உணர்ந்து, மழையில் நனையும் பொழுதெல்லாம் "டேய் சீக்கிரம் வாடா. ஜுரம் வந்து தொலைக்க போவுது" என்று சொல்வார்கள்.
அப்படி மழையில் நனையும் பொழுது தோன்றும் இனிய கற்பனைகள்தான் இந்த பாடல். ஹரிணியின் இனிய குரலில் ஜோதிகா அனுபவித்து ஆடும் பாடல் இதோ உங்களுக்காக..
ஆமாம் இப்படி மழையில் நனைபவரா நீங்கள்.. அப்படி என்றால், உங்கள் எண்ணத்தை இங்கு பதிவு செய்யுங்கள்.
Friday, October 10, 2008
பொன் வானம் - இன்று நீ நாளை நான்
தனிமை கொடுமையானது. அதிலும் இளமையில் தனிமை மிகவும் கொடுமையானது. எல்லாம் இருந்தும் சூழ்நிலையின் கைதியாக விதவையாக வாழும் பெண்ணின் என்ன ஓட்டங்கள் தான் இந்த பாடல்.
அருமையான மழையின் பின்னணி இசையோடு , ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழாகாக தன் குரலில் கொண்டு வந்து ஜானகி பாடும் இனிய கீதம். "தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ" என்று கேட்கும்பொழுதே அந்த சோகம் நம்மில் தொற்றிக்கொல்லுகிறது.
பாடல் வரிகள்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...